முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 13) வெளியிட்டார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ வெளியிட்டார். அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய அரசு ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, இதுபோன்ற பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், தமிழக அரசு முதல்முறையாக இம்முறை 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவதற்கு முன்பாக, பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

முக்கிய அம்சங்கள் வருமாறு:-

1) 2021-22-ல் இருந்தே 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து எட்டி வருகிறது. 2025-25லும் 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2) தமிழ்நாடு 2023-24-ம் ஆண்டில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21 சதவீதம் பங்களித்துள்ளது. 2023-24ல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71 சதவீதமாகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33 சதவீதமாகவும் உள்ளது.

3) தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசிய சராசரியைவிட அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23ல் ரூ.2.78 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக தனிநபர் வருமானத்தில் தமிழகம் நான்காம் இடம் வகிக்கிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியை விட மேலே உள்ளது.

4) 2023-24ல், சேவைத் துறையானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63 சதவீதம்  பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37 சதவீதம் ), முதன்மைத்துறை (13 சதவீதம் ) பங்களித்துள்ளன. வளர்ந்த மாநிலங்களைப் போலவே மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5 சதவீதம்  அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.

5) தமிழ்நாட்டில் 2022-23-ல் 6 சதவீதம்  என்றிருந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கம், 2023-24ல் 5.4 சதவீதமாகவும், 2024-25ல் (ஜனவரி 2025 வரையில்) 4.8 சதவீதமாகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2019-20ல் 6 சதவீதம்  என்றிருந்த நகர்ப்புர பணவீக்கம் 2024-25-ல் (ஜனவரி 2025 வரையில்) 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

6) மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவில் நெல், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62 சதவீதமாகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38 சதவீதமாகவும் உள்ளன. பயிர்ப்பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்து வருகிறது. 2019-20ல் மொத்த பயிர்ப் பரப்பில் 32.1 சதவீதமாகவும் இருந்த நெல்லின் பங்கு 2023-24ல் 34.4 சதவீதம்  ஆக அதிகரித்துள்ளது.

7) தமிழக விவசாயிகளுக்கு பட்டியலிடப்பட்ட வணி வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் கடன் 2019-20ல் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து, 2023-24ல் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

8) 2024-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9) 2019-20 முதல் 2023-24 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு ரூ.5,909 கோடியிலிருந்து ரூ.20,157 கோடியாக அதிகரித்துள்ளது.

10) 2005-06 முதல் 2022-23 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் வறுமை நிலை (ஹெச்சிஆர்) 36.54 சதவீதத்தில் இருந்து வெறும் 1.43 சதவீதமாக வெகுவாக குறைந்துள்ளது.

11) சமூகத் துறைக்கான செலவினங்களை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2019-20ல் ரூ.79,859 கோடியாக இந்த ஒதுக்கீடு, 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து