முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதிலளிக்க எம்.எஸ்.டோனி மறுப்பு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். டோனிசமீபத்தில் விமான நிலையம் வந்திருந்தார்.

அப்போது, அவரிடம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வெற்றி பெற்றது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.எஸ். டோனிஎந்த பதிலும் தெரிவிக்காமல், கையை தேவையில்லை என்பது போல் செய்கை காண்பித்து அங்கிருந்து கடந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்கு எம்.எஸ். டோனிபதில் அளிக்காமல் சென்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

விருதை வென்றார் சுப்மன் கில்

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கிடையே, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது. சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றார். சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார். ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.

டென்னிஸ்: காலிறுதியில் அல்காரஸ்

 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதினர். 

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் காலிறுதியில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோத உள்ளார்.

பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதலாவது சுற்றில் தென் கொரியாவின் கிம் கா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய பி.வி.சிந்து அடுத்த 2 செட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இந்த ஆட்டத்தில் சிந்து 21-19, 13-21 மற்றும் 13-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.

பெனால்டியில் வென்ற ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக்கில் அத்லெடிகோ மாட்ரிட்டை பெனால்டியில் வென்றது அசத்தியது ரியல் மாட்ரிட் கால்பந்து அணி. ரவுண்ட் ஆப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட்டை அணி வீரர் கனோர் கல்லாகர் முதல் நிமிஷத்திலேயே கோல் அடித்து அசத்தினார். பின்னர் இரு அணிகளும் வலுவான டிபென்ஸுகளால் எந்த கோல்களும் அடிக்கவில்லை. 

முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் 1-0 என வென்றதால் இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தது. பின்னர் கூடுதல் நேரம் ஒத்துக்கியும் முடிவு எட்டப்படாததால் ஆட்டம் பெனால்டிக்கு சென்றது. பெனால்டியில் அசத்திய ரியல் மாட்ரிட் அணி 4-2 என வென்றது. இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

சையத் அபித் அலி மரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி பீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே தொடரில் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 78 மற்றும் 81 ரன்கள் விளாசினார்.

1967 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை விளையாடிய சையத் அபித் அலி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 1,018 ரன்களும், 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான சையத் அபித் அலியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து