முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

சென்னை: தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில்  2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 

கூட்டத்தொடர்...

தமிழக சட்டப்பேவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.

வருவாய் வரவுகள்... 

கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை அவர் வெளியிட இருக்கிறார். அதேபோல், 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார்.

புதிய திட்டங்கள்... 

அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தீட்டி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே உள்ள திட்டங்களில் அளிக்கப்படும் உதவித்தொகை இந்த பட்ஜெட் மூலம் அதிகரிக்கப்படுமா? உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? இலவசமாக பெண்கள் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? போன்ற கேள்விகளை பெண்கள் மத்தியில் பட்ஜெட் எழுப்பியுள்ளது.

அலுவல் ஆய்வு கூட்டம்...

இந்த பட்ஜெட் உரையை சட்டசபையில் 2 மணி நேரம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு படிப்பார். அவர் படிக்க படிக்க அந்த தகவல்கள் நேரலையில் வெளியிடப்படும். அவையில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் பட்ஜெட்டை எம்.எல்.ஏ.க்கள் வாசிப்பார்கள். பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து முடித்ததும் அவையின் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் நடத்தப்படும். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? என்பது உள்பட அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் வெளியிடுவார்.

பட்ஜெட் மீது விவாதம்...

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் மறுநாளில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் வேளாண்மை பட்ஜெட் நாளை (15-ம் தேதி - சனிக்கிழமை) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 17-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும். அப்போது சட்டசபையில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். 4 அல்லது 5 நாட்கள் இந்த விவாதம் நடைபெற்று, எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளுக்கு நிதித்துறை அமைச்சர் பதில் அளித்து பேசுவார். அதன் பின்னர் சில நாட்கள் இடைவெளி விடப்பட்டோ அல்லது தொடர்ச்சியாகவோ சட்டசபை நடைபெறும். அப்போது ஒவ்வொரு அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடத்தப்படும்.

துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு....

அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் தேதிகளில் அந்தந்த துறைக்கான விவாதம் நடத்தப்பட்டு, அன்றே அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். பின்னர் துறைகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அந்தத் துறைக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 2025-2026-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-2025-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வரும் 21-ம் தேதியன்று அவைக்கு அளிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து