முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லையில் பாக்., டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள்பறிமுதல்

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      இந்தியா
Drone 2023 06 12

Source: provided

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட டிரோன் ஒன்று நேற்றுமுன்தினம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் கஜ்சிங்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பறப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து அப்பகுதியிலுள்ள வயல்கள் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட டிரோன் மூலம் இந்திய எல்லைக்குள் சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு ஊடூறுவி அப்பகுதியிலுள்ள கோதுமை வயலில் வீசப்பட்ட மர்ம பொட்டங்களைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலத்தை சோதனை செய்ததில் அதில் 1.116 கிலோ அளவிலான ஹெராயின் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப் பொருளின் மதிப்பானது இந்திய ரூ.5 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சில ஹெராயின் பொட்டலங்கள் அங்குள்ள வயல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எனவே, பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை, குற்றப் புலானாய்வுத் துறை மற்றும் கஜ்சிங்பூர் காவல் துறையினர் ஆகியோர் அப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், பஞ்சாப்பில் டிரோன் மூலம் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்களை கடத்தி அதனை மாநிலம் முழுவதும் விநியோகித்து வந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து