முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கோவக்காய் தேங்காய்பால் கறி

Cooking time in minutes: 
20
Ingredients: 

கோவக்காய் தேங்காய்பால் கறி செய்யத் தேவையான பொருள்கள் ;

  1. நறுக்கிய கோவக்காய் -1/4 கிலோ.
  2. தேங்காய் -1.
  3. பட்டை - 2.
  4. கிராம்பு - 4.
  5. கசாகசா - சிறிதளவு.
  6. மஞ்சள்தூள் -  ஒரு டீஸ்பூன்.
  7. மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்.
  8. உப்பு - தேவையான அளவு.
  9. எண்ணெய் - 5 ஸ்பூன்.
  10. இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் -  5.
  11. இஞ்சி, பூண்டு - சிறிதளவு.
  12. கறிவேப்பிலை - 20.
  13. பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1.
  14. பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி -1.
  15. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  16. சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன். 
Method: 

செய்முறை ;-

  1. மிக்சி ஜாரில் 1/2 மூடி தேங்காய்யை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி ஒரு கப் தேங்காய்பாலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு கசாகசாவை போட்டு வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் சில் 2, பட்டை 2, கிராம்பு 2 மற்றும் சிறிதளவு வறுத்த கசாகசாவை  போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து சுத்தம் செய்து நறுக்கிய 1/4 கிலோ கோவக்காயை  போட்டு சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 நிமிடம் கடாய்யை மூடி கோவக்காயை நன்றாக வேக  வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும், 
  7. எண்ணெய் சூடானவுடன்  2 கிராம்பு, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் 5, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் 20 கறிவேப்பிலை,போட்டு நன்றாக வதக்கவும்.
  8. இதனுடன்  பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி,  பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு,ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள்,தேவையான அளவு உப்பு  மற்றும் வேக வைத்த கோவக்காய் போட்டு நன்றாக வதக்கவும்.
  9. இதனுடன்மிக்சி ஜாரில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை ஊற்றி கலந்து விட்டு 5 நிமிடம் கடாய்யை மூடி  வேக  வைக்கவும்.
  10. இப்போது முடியை திறந்து பார்க்கலாம், கோவக்காய் நன்றாக வெந்துள்ளது,இதில் ஒரு கப் தேங்காய்ப்பாலை ஊற்றி கலந்து விடவும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான கோவக்காய் தேங்காய்பால் கறி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago