முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் மாசி தெப்ப உற்சவம்: வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி உலா

புதன்கிழமை, 8 மார்ச் 2023      ஆன்மிகம்
Tiruchendur 2023 03 08

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசிப்பெரும் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசி திருவிழா தேரோட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11-ம் திருவிழாவான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி வந்து சேர்ந்தது. அங்கு இரவு 10:30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 12-ம் திருவிழாவான நேற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து