முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா - தென்கொரியா ராணுவம் போர் பயிற்சி தீவிரம்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      உலகம்
US-South-Korea-2023-03-23

அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்கொரியாவுடன் இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் வடகொரியாவை ஆத்திரமூட்டும் விதமாக பிரீடம் ஷீயீல்டு 23 என்ற பெயரில் 11 நாட்கள் போர் ஒத்திகையை இரு நாடுகளும் தொடங்கியுள்ளன. இந்த போர் பயிற்சியானது வடகொரியாவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள சிஹெயுங், போச்சியோன் பகுதியில் நடைபெற்று வருகிறது. 

போர் விமானங்கள், டாங்கிகள், எம்777 ஹோவிட்சர் போன்ற போர் வாகனங்களுடன் இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பலும் தென்கொரியாவிற்கு வந்தடைந்தது.

இந்த நிலையில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக பல ஏவுகணையை விண்ணில் செலுத்தி வடகொரியா பதிலடி கொடுத்துள்ளது. கடற்பரப்பில் ஏவுகணைகள் செலுத்தப்பட்டதை உறுதி செய்திருக்கும் தென்கொரியா இது குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதாக தெரிவித்திருக்கிறது. 

தொடர் ஏவுகணை சோதனை அதிநவீன கருவிகளுடன் போர் பயிற்சியும் தொடர்வதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து