முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பிரீமியர் டென்னிஸ் போட்டி நட்புறவாக இருக்கும்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், மே. 27 - சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் போட்டி (ஐ.பி.டி.எல்.) வீரர்கள், டி.வி. பார்வையாளர்களுக்கு இடையே நட்புறவாக இருக்கும் என்றும் இதில் அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்பார் கள் என்று டென்னிஸ் வீரர் மகேஷ் பூப தி தெரிவித்து இருக்கிறார். 

ஐ.பி.டி.எல். போட்டி 2014 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக தீவிர ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் பிரபல டென்னி ஸ் வீரர்களான நோவக் ஜோகோவிக், ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் முன்னாள் வீரர்கள் ஆன்ட்ரே அகாசி, மற்றும் பீட் சாம்ப்ராஸ் ஆகியோர் பங் கேற்க உறுதி அளித்துள்ளனர். 

இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐ. பி.எல்.) வெற்றிகரமாக நடந்து வருவ தை கருத்தில் கொண்டு பூபதியின் சொந்த நிறுவனமான குளோப் ஸ்போர் ட் சார்பில் ஐ.பி.டி.எல். உருவாக்கப் பட்டு உள்ளது. 

ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் உலகின் சிறந்த வீரர் மற்றும் வீராங்க னைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிங்கப்பூர், டோக்கியோ, மும்பை, டெல்லி, ஹாங்காங், மணிலா, சியோ ல், துபாய் , ஜகர்த்தா ஆகிய நகரங்கள் உட்பட 9 - 10 நகர்கள் 6 அணிகளை வா ங்க ஆர்வமாக உள்ளன. 

முதலாமாண்டு நடைபெறும் இந்தப் லீக்கில் 30 ஆட்டங்கள் நடைபெறும் என்றும், இவை உள்நாடு மற்றும் வெ ளிநாடுகளில் நடைபெறும் என்றும் தெ ரிய வருகிறது. ஒவ்வொரு அணியிலும் 6 முதல் 10 வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

இதில் 5 ஆட்டங்கள் இரவு நடக்க இருக் கின்றன. ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கல ப்பு இரட்டையர் மற்றும் மூத்த வீரர்கள் பங்கேற்கும் ஒற்றையர் ஆகிய பிரிவுக ளில் போட்டி நடக்க இருக்கிறது. 

2013 -ம் ஆண்டு சர்வதேச போட்டிகளி ல் இருந்து விலகப் போவதாக இந்தி யாவின் இரட்டையர் ஸ்பெசலிஸ்ட்டான மகேஷ் பூபதி ஏற்கனவே தெரி வித்து இருக்கிறார். இதில் மகேஷ் பூபதியின் பார்ட்னர்களாக போரிஸ் பெக்கர் மற்றும் கிமல் ஸ்டாப் ஆகி யோர் உள்ளனர். கிமல் ஸ்டாப் ஏ.டி. பி. போர்டு உறுப்பினராக உள்ளார். 

ஐ.பி.டி.எல். போட்டி குறித்து பூபதி தெரிவித்தாவது - ஐ.பி.எல். போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.டி. எல். உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இதில் ஜோகோவிக், ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோ வா உள்பட அனைத்து முக்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பார் கள். 

இதில் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கும். இந்தப் போட்டி வீரர்கள், டி. வி. மற்றும் பார்வையாளர்களுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் வகை யில் இருக்கும். 

இதில் ஒவ்வொடு ஆட்டமும் அதிகபட்சமாக 3 மணி நேரத்திற்கு மேல் இருக் காது. எனவே பார்வையாளர்களுக்கு இது பரபரப்பாக இருக்கும். 

டென்னிஸ் போட்டி தனி நபர் ஆட்ட மாகவே இருந்து வருகிறது. டேவிஸ் கோப்பை மற்றும் பெடரேசன் கோப் பை தவிர அணியாக சேர்ந்து விளை யாட வாய்ப்பு இல்லை.

எனவே அணி உணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச பிரீமியர் டென் னி ஸ் லீக் போட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் வீரர்களுக்கு சரியான ஓய்வு இல்லை என்று வருத்தப்பட்டார்கள். அவர்களு க்கு சிரமம் இல்லாமல் இந்தப் போட்டி இருக்கும். 

இந்தியாவில் ஏ.டி.பி. சார்பில் சென் னை ஓபன் மட்டும் நடக்கிறது. மகளி ருக்கான போட்டி எதுவும் இல்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் தாக்கம் உள்ளது. 

தவிர, ஆசிய அளவில் சர்வதேச போட்டிகள் குறைவாகவே இருப்பதால் ஆசி ய ரசிகர்களை திருப்தி படுத்தும் வகை யிலும், டென்னிஸ் தரம் உயரும் வகை யிலும் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன. 

ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள். 

இந்திய ரசிகர்கள் இந்தப் போட்டியின் மூலம் மரியா ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜோகோவிக் போன்ற முன்னணி நட்சத்திர வீரர்களி ன் ஆட்டத்தை கண்டு களிக்கலாம். 

இந்தப் போட்டியில் பங்கேற்பது குறி த்து லியாண்டர் பயஸ், சானியா மிர் சா, ரோகன் பொபண்ணா மற்றும் சோம்தேவ் வர்மன் போன்ற வீரர்களு டன் பேச்சு வார்தை நடத்தி இருக்கிறே ன். இதன் மூலம் இளம் வீரர்கள் பயன் அடைவார்கள். 

இந்தப் போட்டி குறித்து ஏ.டி.பி. மற்று ம் டபிள்யு.டி. ஏ. ஆகிய அமைப்புகளு டன் பேசியிருக்கிறேன். அவைகள் இத ற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago