முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசா நிர்வாக அதிகாரி இந்தியா வருகை: இஸ்ரோ தலைவர்களை சந்திக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      உலகம்
Bill-Nelson-2023-11-28

புது டெல்லி, நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் நேற்று இந்தியாவுக்கு  வந்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு நேற்று வந்துள்ளார். இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 

இந்தியாவில் வந்திறங்கியுள்ளேன்.  இஸ்ரோவுடனான நாசாவின் உறவை வளர்ப்பதற்கான ஒரு வாரகால கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தயாராக உள்ளேன். விண்வெளி துறையில் இந்தியா தலைவராக செயல்பட்டு வருகிறது.  ஆக்கப்பூர்வ முறையில் இந்த பயணம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.  அவருடைய இந்த பயணத்தில், இரு நாட்டு விண்வெளி அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், விரிவான அளவிலான புதிய கண்டுபிடிப்பு மற்றும் புவி அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் வகையில் பேச இருக்கிறார் என நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து