முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயலால் 3 விமானங்கள் ரத்து: சென்னையில் 9 விமானங்களின் வருகை புறப்பாடு தாமதம்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிக்ஜாம் புயல் காரணமாக, நேற்று சென்னை விமான நிலையத்தில் 9 விமானங்களின் வருகை, புறப்பாட்டில் சுமார் ஒரு மணி முதல் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. மேலும், 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் விமானங்களின் வருகை, புறப்பாடு, ரத்து குறித்து சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனங்களிடம் பயணிகள் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாக்கக் கூடிய மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.40 மணியளவில் மும்பைக்கு செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 2 விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.

அதே போல் நேற்று காலை 8.55 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என மொத்தம் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. அதே போல் சென்னையில் இருந்து புறப்படும் சிங்கப்பூர், துபாய், சார்ஜா, அந்தமான், மும்பை, ஜோத்பூர், ஐதராபாத் ஆகிய 7 விமானங்களின் புறப்பாடு மற்றும் துபாய், மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 2 விமானங்களின் வருகை என மொத்தம் 9 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. 

எனவே, அனைத்து விமான பயணிகளும் முன்னதாகவே தாங்கள் பயணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களின் விமான புறப்பாடு, வருகை பற்றி விவரங்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்றார்போல் தங்களின் பயணங்களை அமைத்து கொள்ள வேண்டும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து