முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதன் முறையாக 4 ஓவர் பவுலிங் செய்த தோனி

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 22 - பல்வேறு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியின் கேப்டன் தோனி முதன்முதலாக 4 ஓவர்கள் பந்து வீசியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் அரை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. அரை இறுதியில் இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் டோணி பந்து வீச வந்தார். அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

தனது பந்து வீச்சால் இலங்கை அணியை திணறடிக்கலாம் என்று நினைத்தார் தோனி. ஆனால் ஜெயவர்த்தனேவும், ஏஞ்சலோ மாத்யூஸும் தோனி வீசிய பந்துகளில் விளாசிவிட்டனர். தோனி 4 ஓவர்கள் பந்து வீசினார். வழக்கமாக தோனி விக்கெட் கீப்பிங்கில் தான் நிற்பார். முதன்முறையாக தோனி இதுவரை விளையாடிய 222 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்த போட்டியில் தான் முதன்முறையாக 4 ஓவர்கள் பந்து வீசியுள்ளார். இதற்கு முந்தைய சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 2 ஓவர்கள் பந்து வீசியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago