முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு : மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 33 ஆண்டுகளாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தியதற்காக அறியப்பட்ட மன்மோகன்சிங், 1991 அக்டோபரில் முதல்முறையாக எம்.பி. ஆனார்.

நரசிம்மராவ் அரசாங்கத்தில் 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார். 91 வயதாகும் மன்மோகன்சிங், நேற்று தனது பதவி காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்றார். 

இந்த நிலையில் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

டாக்டர் மன்மோகன் சிங், 33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு தி.மு.க. சார்பாகவும், என் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அரசியல் வட்டாரத்தில் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், எங்களுக்கு உத்வேகம் அளித்தது.

உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நீங்கள் செல்லும் போது, இந்திய யூனியனுக்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பின் மூலம் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். 

உங்கள் அறிவு மற்றும் தொலைநோக்கு பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து