முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிப்பு குறித்து இஸ்ரேல் நீதிபதியின் பேச்சால் கொதிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

டெல் அவிவ், ஜூலை. 6 - தாங்கள் கற்பழிக்கப்படுவதை சில பெண்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள இஸ்ரேல் நீதிபதியால் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது. டெல் அவிவ் மாவட்ட நீதிபதி நிஸ்ஸின் யஷயே என்பவர்தான் இப்படிக் கருத்துக் கூறியுள்ளார். கற்பழிப்பு வழக்கு ஒன்றை விசாரித்த யஷயே, கருத்து தெரிவிக்கையில் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் கற்பழிக்கப்படுவது பிடித்திருக்கிறது, அதை விரும்பவும் செய்கிறார்கள் என்றார். இந்தக் கருத்து இஸ்ரேலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நதான்யாஹுவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெண்கள் நல கமிட்டியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் வக்கீல்கள் சங்கமும் கண்டித்துள்ளது. 13 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில்தான் இந்த நீதிபதி இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார். நான்கு பாலஸ்தீனியர்கள் சேர்ந்து இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தனர். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அப்பீல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த போது தான் நீதிபதி இந்தக் கருத்தை  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்