முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர சதி : ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      இந்தியா
Adishi 2024-02-04

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர சதி நடைபெறுவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி கூறியுள்ளார்.

மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். 

தொடர்ந்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர சதி நடைபெறுவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,

பொய்யான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க திட்டமிட்டு சதி நடக்கிறது. 

டெல்லியில் எந்த அதிகாரிகளும் நியமிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்படுவதும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகாரிகளை கூட்டங்களில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து