முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

BAD BOYS: RIDE OR DIE

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      சினிமா
BAD-BOYS-RIDE-OR-DIE 2024-0

Source: provided

'பேட் பாய்ஸ்' பட வரிசையில் நான்காவது பாகமான இது, 'பேட் பாய்ஸ் ஃபார் லைப் (2020)' படத்தின் தொடர்ச்சியாகும்.

ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), 'பேட் பாய்ஸ் 2 (2023)' படத்திற்கு வழி வகுத்தது (2003).

இந்த புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3-வது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4-வது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6-ம் தேதி படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம்.

உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய 'பேட் பாய்ஸ்' அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும், அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர். ஒரு சுவாரசியமான திருப்பத்துடன். மியாமியின் மிகச்சிறந்த டிடெக்ட்டிவ்ஸ் இம்முறை துரத்தப்படுகின்றனர்.

துப்பறியும் நிபுணர்கள் மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாபியாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை முன்னேறும்போது, துப்பறியும் நிபுணர்கள் துரத்தப்படுபவர்களாக மாறுவதால் , வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

படக்குழு:- நடிகர்கள்: Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith with Tiffany Haddish and Joe Pantoliano. இயக்கம்: Adil & Bilall

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், IMAX-லும், ஜூன் 6, 2024 அன்று இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து