முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில இந்திய பொறியியல் நுழைவு தேர்வு தேதி தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.6 - அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு தேதி வரும் 8 ம் தேதிக்கு பதிலாக 11 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய பொறியியல் நுழைவு தேர்வு வினாத்தாள் வெளியானதால் கடந்த 1 ம் தேதி நடைபெறவிருந்த பொறியியல் தேர்வு இரண்டரை மணி நேரம் தாமதமாக நடைபெற்றது. இதன் காரணமாக அன்றைய தினம் ராணுவ மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வு எழுதியவர்களும் பாதிக்கப்பட்டனர். எனவே மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்காக வரும் 8 ம் தேதி நுழைவு தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. 

ஆனால் 8 மற்றும் 10 ம் தேதிகளில் பல்வேறு நுழைவு தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு தேதியை மாற்றுமாறு பெற்றோர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதைத் தொடர்ந்து வரும் 11 ம் தேதிக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. தலைவவ் வினீத்ஜோஷி தெரிவித்தார். நாடு முழுவதும் 32 ஆயிரத்து 400 மாணவர்கள் 38 தேர்வு மையங்களில் இந்த தேர்வை எழுதவுள்ளனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும். லக்னோவில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்