முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காம்பீர் குறித்து சூர்யகுமார்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      விளையாட்டு
Suryakumar 2023 08 09

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கையுடன் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் கவுதம் காம்பீர் உடன் சிறந்த புரிதல் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். “பல்வேறு கேப்டன்களிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுள்ளேன். கேப்டனாக செயல்பட அந்த அனுபவம் கைகொடுக்கும். இது பெரிய பொறுப்பும் கூட. காம்பீர் தலைமையில் கடந்த 2014-ல் நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி உள்ளேன். அது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

ஏனெனில், அங்கிருந்து தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. எங்களது உறவு அப்படியே இன்னும் வலுவாக உள்ளது. நான் எப்படி பணியாற்றுவேன் என்பதை அவர் அறிவார். பயிற்சியின்போது எனது மைண்ட் செட் என்ன என்பது குறித்தும் அறிவார். அவர் குறித்தும் நான் அறிவேன். எங்களது இந்தப் பயணம் எப்படிச் செல்கிறது என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன். இங்கு அடக்கம் மிகவும் அவசியம். ஆட்டத்தில் சிறந்து விளங்கினாலும், மோசமாக ஆடினாலும் அது அவசியம்” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

சேவாக். கங்குலியின் பேச்சு

இங்கிலாந்தில் சேவாக் ஆடிய இன்னிங்ஸ் ஒன்றில் குறிப்பிட்ட ஓவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டி அது. நாங்கள் 320 அடிக்க வேண்டி இருந்தது. நான் கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தேன். சேவாக் எனக்கு பின்னால் இருந்தபடி வசில் அடித்தார். நான் அவரிடம் கடுமையாக திட்டி, நாம் 320-க்கும் அதிக ரன்களை அடிக்க வேண்டியுள்ளது, உனக்கு இது ஜோக் ஆக இருக்கிறதா என கேட்டேன். 

அவர் என்னிடம் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். பிறகு, போட்டி தொடங்கி நாங்கள் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களை துரத்தி இருந்தோம். ரோனி இரானி பந்து வீச ஆயத்தமானார். நான் சேவாக்-இடம் சென்று நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடுவோம். விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடுமாறு கூறினேன். அவரும் சரி என கூறிவிட்டு கிரீஸ்-க்கு சென்றார். ரோனி வீசிய முதல் பந்தை மிட் ஆஃப் மேல் அடித்தார் அது பவுண்டரியாக மாறியது. நான் அவரிடம் சென்று அருமையாக ஷாட் இந்த ஓவரில் நான்கு ரன்கள் வந்துவிட்டது ரன்களை மட்டும் ஸ்டிரைக் செய்தால் போதும் என்று சேவாக்-இடம் கூறினேன். அவர் அதற்கு சரி சரி... பிரச்சினை இல்லை என்று கூறி கிரீஸ்-க்கு சென்றார்.

அடுத்த பந்தை சேவாக் மிட் ஆன் மீது விளாசினார். அந்த பந்தும் பவுண்டரியை தொட்டது. நான் மீண்டும் அவரிடம் சென்று அருமையான ஷாட் 8 ரன்கள் கிடைத்துவிட்டது. இப்பவும் கூட சிங்கில் எடுக்கலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். அவர் மீண்டும் பிர்ச்சினை இல்லை, அப்படியே செய்யலாம் என கூறி அடுத்த பந்தை அடுக்க தரையில் உட்கார்ந்து ஸ்வீப் செய்தார். அந்த பந்து பின்புறம் பவுண்டரியை தொட்டது. இந்த முறை நான் அவரிடம் செல்லவில்லை. அவருக்கும் புரிந்துவிட்டது, அவர் என்னை பார்க்கவே இல்லை. அடுத்த பந்தை அவர் கவர்களின் மீது விளாசினார். அது சிக்சராக மாறியது. அந்த ஓவரின் ஐந்து பந்துகளையும் அவர் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் சிங்கில் எடுத்தார். அப்போது என்னை கடக்கும் போது, நான் சிங்கில் எடுத்துவிட்டேன் என்று கங்குலி கூறினார்.

மந்தனா புதிய சாதனை

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். இதன் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஷபாளி வர்மா 26 ரன்னிலும் மந்தனா 55 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 55 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் மந்தனா 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.  ஆஸ்திரேலிய வீராங்கனையான எம் லெனிங்கை (3405) மற்றும் கவூர் (3415) ஆகியோரை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை மந்தனா பிடித்துள்ளார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார். அவர் 162 போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் குவித்து யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.

ஹெட், மேக்ஸ்வெல் அதிரடி

அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன. இதில் வாஷிங்டன் ஃபீரிடம் என்ற அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். நேற்று காலை நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றில் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபீரிடம் அணியும் கம்மின்ஸ் தலைமையிலான சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி 19 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் அணியில் ரச்சின் ரவீந்திரா 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய வாஷிங்டன் ஃபீரிடம் அணி 15.3 ஓவரில் இலக்கை எட்டி (149/3) அபார வெற்றியடைந்தது. ஹெட் 77*, மேக்ஸ்வெல் 54* வெற்றிக்கு வித்திட்டார்கள். இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள வாஷிங்டன் ஃபீரிடம் அணி டிஎஸ்கே அணியுடன் நாளை (ஜூலை 27) மோதுகிறது.

பாண்டியா குறித்து பும்ரா 

மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலர் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார். இதை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுடன் அவர் பகிர்ந்துள்ளார். “ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அந்த புரிதல் எங்களுக்கு நிச்சயம் உள்ளது. அதே போல வீரர்களும் உணர்ச்சி வசப்படுவார்கள். ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் போது நிச்சயம் அது வீரர்களை பாதிக்கும். அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் நிறுத்தவும் முடியாது. அந்த மாதிரியான நேரங்களில் உங்கள் மீது நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். இதை சொல்வது எளிது. செய்வது கடினம். ஏனெனில், களத்தில் ரசிகர்கள் எழுப்பும் விமர்சனங்கள் உங்களுக்கு கேட்கும். அந்த மாதிரியான நேரத்தில் நாங்கள் ஒரு அணியாக அவருக்கு ஆதரவாக நின்றோம். அவருடன் பேசினோம். நிச்சயம் அது கடினமான சூழல்.

ஆனால், நாங்கள் டி20 உலகக் கோப்பை வென்றதும் அது அனைத்தும் மாறியது. அதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்போது அனைவரும் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால், இதன் மூலம் இவை அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது என நாம் எண்ண முடியாது. நாளை நாங்கள் தோல்வியை தழுவும் போது இந்த நிலை மாறும். இது விளையாட்டு வீரரின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பகுதி. இதை அனைவரும் கடந்து வருகிறோம். நாங்கள் பிரபலமான விளையாட்டில் அங்கம் வகிக்கிறோம். கால்பந்து உலகில் நட்சத்திர வீரரை கூட ரசிகர்கள் இகழ்ந்தது உண்டு. நாங்கள் எங்கள் ஆட்டத்தில் சிறந்து விளங்க விரும்புகிறோம். இந்த பயணத்தில் இது மாதிரியான சவால்கள் நிச்சயம் வரும். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம்” என பும்ரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து