முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசினால் 6 மாதம் சிறை

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      உலகம்
Japan 2024-11-03

Source: provided

டோக்கியோ : ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பைக், கார் போன்றவற்றை ஓட்டிச் செல்லும் போது செல்போன் பேசினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளது. கவன சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் இத்தகைய போக்குவரத்து விதிகளின் படி இத்தகைய அபராதம் விதிக்கப்படுகிறது.  

ஆனால் ஜப்பானில்  சைக்கிள் ஓட்டும்  போது செல்போனில் பேசினால் கூட 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வதால்  அதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த  உத்தரவை ஜப்பான் அரசு பிறப்பித்துள்ளது.  

சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 

இதுதவிர மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ. இரண்டே முக்கால் லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தத்தை ஜப்பான் அரசு கொண்டு வந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து