முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தலைமையில் 2 நாள் மாநாடு: டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 05

சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் 2 நாள் மாநில கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் மாநில கவர்னர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்கின்றனர். துணை ஜனாதிபதி,  பிரதமர், மத்திய உள்துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், கல்வி, பழங்குடியினர் நலன், தகவல் மற்றும் ஒளிபரப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்கள், நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சரவை செயலகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினர் பகுதிகள், முன்னோடி மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி  சென்றடைந்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து