முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்., மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது : ஆய்வறிக்கையில் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      இந்தியா
Crude-oil 2024-11-03

Source: provided

புதுடெல்லி : மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.  

இது தொடர்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான தகவல்கள் மூலம் கிடைக்க பெற்ற விவரம் வருமாறு:-

அக்டோபர்  மாதம் 43.5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் தினமும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.இதில் 40 சதவீதம் 17.3 லட்சம் பேரல்கள் தினமும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது முந்தைய மாதத்தை காட்டிலும் 9.2 சதவீதம் குறைவு ஆகும்.

அதே போல் ஈராக்கில் இருந்து 3.3 சதவீதம் குறைந்து 8.4 லட்சம் பேரல்கள் சவுதி அரேபியாவில் இருந்து 10.9 சதவீதம் குறைந்து 6.5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் தினமும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகையில், ஈரான் -இஸ்ரேல் இடையிலான மோதல் மற்றும் தாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கும் போது கொள்முதல் செய்யலாம் என எண்ணெய் சுத்திகரிப்பு உரிமையாளர்கள் முடிவு செய்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. 

குளிர்காலத்தின் தேவைக்காக கச்சா எண்ணெயை வாங்க அவர்கள் முடிவு செய்துள்ளதால், வரும் நாட்களில் இறக்குமதி மீண்டும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து