முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி: இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் 6.8 கோடி வாக்குகள் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      உலகம்
Kamala-Harris---Trump-2024-

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே  வாக்கு செலுத்தும் வசதி நடைமுறை காரணமாக இதுவரை 6.8 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (60) களமிறங்கி உள்ளார்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.

இந்த நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 6.8 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் வசதிக்கு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இது குறித்து நியூயார்க் நகரைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் கூறுகையில், 

இந்த வசதி மிகவும் வரவேற்கத்தக்கது. நாளை 5-ம் தேதி எனது வாக்கை என்னால் செலுத்த முடியாமல் போய்விட்டால், என்னுடைய வாக்கு வீணாகிவிடும். அமெரிக்காவுக்கு இது ஒரு முக்கியமான நேரம். எங்களை வழிநடத்த வேண்டிய நபருக்கு நாங்கள் வாக்களிக்காமல் இருக்க முடியாது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து