முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்வரத்து அதிகரிப்பு: 63 அடியை எட்டும் வைகை அணை நீர்மட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      தமிழகம்
vaigai dam-2023-05-04

Source: provided

தேனி : தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியை விரைவில் எட்டவுள்ளது. 

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.  வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. 

நேற்று காலை நிலவரப்படி 62.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 2745 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே விரைவில் அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து