முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டுள்ளேன் ராகுல்காந்தி உருக்கம்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

Source: provided

வயநாடு: வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டுள்ளேன்  என்று தெரிவித்த ராகுல்காந்தி, ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களைவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; "என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும்.

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். இது தேசிய பேரிடர்தான். மக்களுக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுகிறது. வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டுள்ளேன். மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவை குறித்து மக்கள் என்னிடம் பேசினர். வயநாட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது; இதற்கு விரைவில் ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து