முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியைக்கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது: அமித்ஷா பேச்சு

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      இந்தியா
Amit-Shah 2023-11-17

Source: provided

ஸ்ரீநகர் : மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார் 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு முதல் முறையாக தற்போது சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி கடந்த 18-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தொடர்ந்து 25-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா காஷ்மீரில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அதன்படி, பூஞ்ச் மாவட்டத்தின் மேதார் பகுதியில்  நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் முர்தாஸா கானை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,

1990-களில் நடந்த எல்லை தாண்டிய துப்பாக்கி சூடுகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் இன்று எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு நடப்பதில்லை. இதற்கு காரணம், இங்கிருந்த முந்தைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானைக் கண்டு பயந்தார்கள். ஆனால் இப்போது மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது. 

அவர்கள் துப்பாக்கிசூடு நடத்தத் துணிய மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் இருந்து துப்பாக்கிகளையும், கற்களையும் பறித்து விட்டு, மடிக்கணினிகளை மத்திய பா.ஜ.க. அரசு கொடுத்துள்ளது. ஜம்மு பகுதியில் உள்ள மலைகளில் துப்பாக்கி சத்தம் எதிரொலிக்க பா.ஜ.க. அரசு அனுமதிக்காது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து