முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை தொடக்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும் : சிவப்பு புத்தகம் குறித்து கார்கே கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      இந்தியா
Keerke 2024-11-10

Source: provided

மும்பை : இந்திய அரசியலமைப்பின் சிவப்பு புத்தகத்தை நகர்ப்புற நக்சலிசத்துடன் இணைத்து பேசியதற்காக பிரதமர் மோடி  மற்றும் பா.ஜ.க.வை மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார். 

மகராஷ்டிர மாநில தேர்தலுக்காக மகா விகாஸ் அகாதியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று வெளியிட்டார். பின்பு செய்தியாளர்களிடம்  கார்கே கூறியதாவது, 

காங்கிரஸ் கட்சியின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மக்களைப் பிரிப்பதற்கானது இல்லை. இதன் மூலம் மக்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும். மோடி இந்தச் சிவப்பு புத்தகத்தை நகர்ப்புற நக்சல் புத்தகம், மார்க்சிஸ்ட் இலக்கியத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிடுகிறார். 

கடந்த 2017-ம் ஆண்டு இதே போன்ற புத்தகம் ஒன்றை அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்க்கு அவர் வழங்கினார். அதில் வெற்றுப் பக்கங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அந்தச் சிவப்பு புத்தகம் குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டுமொத்த அரசியலமைப்பு இல்லை. 

பா.ஜ.க.வும், பிரதமரும் சித்தரிப்பது போல இது வெற்றுக் காகிதம் இல்லை. அவரை (பிரதமர் மோடி) மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம். நாட்டைப் பிரித்து வைத்தால்தான் காங்கிரஸ் பலமடையும் என்று பிரதமர் கூறுகிறார்.  இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் யோகியிடமிருந்து வருகின்றது.

பிரதமர் மோடியோ நீங்கள் தனித்திருந்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று கூறுகிறார். இதில் எந்த கோஷம் வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தவரைக் கொன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள் என்று தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது அரசியலமைப்பு சாசனத்தின் சிவப்பு நிற புத்தகம் ஒன்றை காட்டினார்.

தொடர்ந்து மகாராஷ்டிரா தேர்தலுக்கான வாக்குறுதிகளை பட்டியலிட்ட கார்கே, மகா விகாஸ் அகாதி வெற்றி பெற்றால் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அவர் கூறுகையில், 

நாங்கள் வெற்றி பெற்றால் மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழகக்தில் இருப்பது போல, அதிகபட்ட இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தை விட அதிகப்படுத்துவோம். இந்த சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களை பிரிப்பதற்கானது இல்லை. மாறாக பல்வேறு சமூகங்களின் தற்போதைய நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான பலன்களை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து