முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 சட்டசபை தேர்தலில் திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார் : முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-03-10

Source: provided

சென்னை : 2026 சட்டசபை தேர்தலில் திறமை வாய்ந்தவர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களை  சட்டமன்றத்துக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்கள் கடமை என்று தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  விருதுநகரில் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அரசின் திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கள ஆய்வு செய்வதற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் திட்டமிட்டு என்னுடைய பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். ஆட்சிக்கான கள ஆய்வோடு,  கட்சிக்கான கழக ஆய்வும் சேர்த்து நடத்தினால்தான், இந்தப் பயணத்தின் நோக்கம் முழுமையாகும்.

தேர்தல் நேரங்களில் விருதுநகர் மாவட்டத்தில் மாநாடுகளை நடத்துவதை நாம் வழக்கமாக வைத்திருந்தோம். 2004 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விருதுநகரில்தான் தென்மண்டல மாநாடு நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் 40-க்கு 40 பெற்றது தி.மு.க. கூட்டணி. 

அதேபோல் 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது முழக்கத்தை முதன் முதலாக 2022-ல் விருதுநகரில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் தான் முன் வைத்தேன். சொன்னது போலவே 40-க்கு 40 வரலாற்று வெற்றியை நாம் பெற்றோம். அதே போன்ற வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பெற்றாக வேண்டும். 

வரும் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதை நினைத்துக் கொண்டு மெத்தனமாகவும் இருந்து விடக் கூடாது. அலட்சியமாகவும் இருந்து விடக் கூடாது. மக்களை சந்தித்து நம்முடைய கொள்கைகளை, சாதனைகளைச் சொல்லுங்கள். 

நம்முடைய ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவதொரு வகையில் பயன்பெறும்படி நம்முடைய திட்டங்கள் அமைந்திருக்கிறது. அதை மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்வது மாதிரி துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும். தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் மற்றும் மகளிரைக் கழகத்தை நோக்கி ஈர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களை அழைத்து, அவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தான் எதிர்காலத்திற்கான விதைகள். பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களைச் சிறு சிறு அளவில் நடத்துங்கள்.

 நம்முடைய சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் நம்முடைய வேலை.  உங்களின் வேலையில் கவனம் செலுத்துவது போன்றே, உங்கள் குடும்பத்துக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நேரம் ஒதுக்கிச் செலவிடுங்கள். உங்கள் பணிகளுக்கிடையே ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரத்தைக் கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கழகப் பணிக்கு ஒதுக்குங்கள்.

உங்களுக்கு நான் நிர்ணயித்துள்ள இலக்கு 200-க்கு 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். வேட்பாளர் யார் என்று தலைமைக் கழகம் அறிவிக்கும். வெற்றி பெறுபவர் தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

எனவே, திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்கள் கடமை.ஏழாவது முறை ஆட்சி அமைக்க விருதுநகரில் இருக்கும் ஏழு தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி எனக்கு வர வேண்டும்.தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது என்ற வரலாற்றை எழுத தி.மு.கவினர் வீரியத்துடன் செயல்படுங்கள். வெற்றியை ஈட்டித் தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து