முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை குவிப்பது மகிழ்ச்சி: கில்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      விளையாட்டு
Subman-Gill 2024-07-02

Source: provided

சென்னை : இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்துள்ளார்.

2வது இன்னிங்சில்...

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பந்த் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசி அசத்தினர். அவர்கள் இருவரும் சுழற்பந்துசாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தனர். ரிஷப் பந்த் 109 ரன்களும், ஷுப்மன் கில் 119* ரன்களும் எடுத்தனர்.

ரன்களை சேர்ப்பேன்...

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து ஷுப்மன் கில் மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சாளார்களுக்கு எதிராக ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடும் பயிற்சியில் ஆரம்பத்திருலிருந்து ஈடுபட்டு வருகிறேன். அதிலும் குறிப்பாக, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடி ரன்களை சேர்ப்பேன். வங்கதேசத்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியிலும் அதனையே செயல்படுத்துகிறேன்.

எனக்கு எளிதாக... 

இளம் வயதிலிருந்து அதிக பயிற்சி மேற்கொண்டதால், ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடுவது எனக்கு எளிதாக உள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் குவிப்பது மிகுந்த மனநிறைவைக் கொடுக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அதிகம் பயிற்சி மேற்கொண்டேன். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடர் எனது நம்பிக்கையை அதிகரித்ததாக நினைக்கிறேன். எனது சிறப்பான ஆட்டம் இன்னும் வரவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து