முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக சிக்ஸர் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடம்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      விளையாட்டு
2-Ram-53

Source: provided

மும்பை:டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர் விளாசியவர்களின் பட்டியலில் இந்திய இளம்வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடத்தில் பிடித்துள்ளார்.

அரைசதம் விளாசல்... 

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 இன்னிங்ஸிலும் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்த போதிலும் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட்களிலும் 4 இன்னிங்ஸில் 3-ல் அரைசதம் விளாசி அசத்தினார்.

700-க்கும் அதிகம்...

இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜெய்ஸ்வால் 20 இன்னிங்ஸில் 7 அரைசதம், 3 சதம், 2 இரட்டைசதம் ஆகியவை அடித்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரில் 700-க்கும் அதிகமான ரன்கள் குவித்து வியக்க வைத்தார். அவர் இதுவரை தனது இன்னிங்ஸில் 32 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 2014-ம் ஆண்டு பிரண்டன் மெக்கல்லம் 33 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். ஜெய்ஸ்வால் இந்த சாதனையை முறியடிக்க ஒரு சிக்ஸர்கள் அடித்தால் போதும். வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் அவர் அச்சாதனையும் எளிமையாக முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஜெய்வால் முதலிடம்...

2023-2025 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட உலக சாம்பியன்ஷிப் கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் வருமாறு., யஷஸ்வி ஜெய்ஸ்வால் -32 சிக்ஸர்கள் (இந்தியா), பென் ஸ்டோக்ஸ்-22 சிக்ஸர்கள்(இங்கிலாந்து), கமிந்து மெண்டிஸ் -19 சிக்ஸர்கள்(இலங்கை), ரோகித் சர்மா-17 சிக்ஸர்கள்(இந்தியா), சுப்மன் கில்-16 சிக்ஸர்கள்(இந்தியா), கிளென் பிலிப்ஸ்-16 சிக்ஸர்கள்(நியூசிலாந்து),  மேலும், ஜெய்ஸ்வால் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான தொடரின் போது பென் ஸ்டோக்ஸின் (26 சிக்ஸர்கள்) சாதனையையும் முறியடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து