முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களித்த மனு பாக்கர்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      விளையாட்டு
Manu 2024-10-05

Source: provided

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர். மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இந்நிலையில் நேற்று அரியானா தேர்தலில் முதல்முறையாக வாக்களித்தப்பின் பேட்டியளித்த மனு பாக்கர் கூறியதாவது., நமது நாட்டின் இளைஞர்களாக இருக்கும் நாம் வாக்களிப்பது நமது கடமை. உங்களுக்கு யார் சிறந்த தலைவராக, சிறந்த வேட்பாளராக தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள். 

நமது சிறிய முயற்சிதான் பெரிய இலக்குகளுக்கு வித்திடும். முன்னேற்றம் நமது கைகளில் இருக்கிறது. ஏனெனில் நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள்தான் நமது கனவை நிறைவேற்றுவார்கள். நான் முதன்முதலாக வாக்களித்துள்ளேன். வாக்களிக்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். வாக்களித்தில் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றார். தனது எக்ஸ் பக்கத்தில் இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்க கோரிக்கை விடுத்திருந்தார். விருது வென்ற மனு பாக்கர் இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னையிலும் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

________________________________________________________________________

ஜெமிமாவுக்கு சிறந்த பீல்டர் விருது

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 58 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியை தழுவியதால் அரையிறுதிக்கு முன்னேற எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் (இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்) முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதேபோல், ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீராங்கனை விருது இளம் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

________________________________________________________________________

ஆஸ்திரேலிய வீரர் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

இந்நிலையில், இம்முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் எனவும், என்னுடைய பேட்டிங் இடம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உலகின் டாப் 2 அணிகள். கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். பார்டர் - கவாஸ்கர் கோப்பையை நாங்கள் வென்று 10 வருடங்கள் கடந்து விட்டது. இந்த வருடம் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் . இவ்வாறு அவர் கூறினார்.

________________________________________________________________________

சூர்யகுமார் குறித்து ஹர்பஜன் 

இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவியேற்ற பின்னர் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் இது எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி காரணமாகவே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்தேன் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சூர்யகுமார் யாதவை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக கொண்டு வந்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். எனக்கு அந்த முடிவு ஏமாற்றமாகவும் இருந்தது. அவர் (பாண்ட்யா) டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தார். ரோகித் சர்மா ஓய்வு பெற்றதும் அவர் இயல்பாக கேப்டனாக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

________________________________________________________________________

கால்பந்து வீரருக்கு அபராதம்

இங்கிலாந்தில் பிரெஸ்டன்-பிளாக்பர்ன் அணிகள் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது எதிர் அணி வீரரை கடித்ததற்காக கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.16 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

பிரெஸ்டன் வீரரான மிலுடின் ஒஸ்மாஜிக் கடந்த 22-ந்தேதி நடந்த ஆட்டத்தில் பிளாக்பர்ன் பின்கள வீரர் ஓவன் பெக்கை கடித்ததாக தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார். அவர் கடிக்கப்பட்டதாக நடுவர் மாட்டோனோ ஹூவிடம் பெக் கூறிய போதிலும், இந்தச் சம்பவத்திற்காக மிலுடின் ஒஸ்மாஜிக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை. போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து