முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப் பள்ளிகளில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகள் இன்று துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      தமிழகம்
School 2023 04 07

Source: provided

சென்னை : அரசு பள்ளிகளில்  கற்றல் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. 

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது கற்றல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் இன்று திங்கட்கிழமை முதல் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வரை 4 மாதங்கள் நடைபெறவுள்ள தேர்வுகளின் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதில் முதல்கட்ட தேர்வு இன்று முதல் 10-ம் தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு வருகிற 22 முதல் 25-ம் தேதி வரையும், 3-ம் கட்ட தேர்வு அடுத்த மாதம் (நவம்பர்) 26 முதல் 29-ம் தேதி வரையும், 4-ம் கட்ட தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன. 

தேர்வுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/ என்ற மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். இதையடுத்து தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக அந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும், தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்தி விட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து