முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      விளையாட்டு
Australia 2024-03-27

Source: provided

ஷார்ஜா : பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து அவுட்...

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபத்து பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. 

அபார வெற்றி... 

அந்த அணியில் நிலாக்ஷி சில்வா 29 ரன்களும் ஹர்ஷிதா 23 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மேகன் ஸ்கட் 3 விக்கெட், மொலினஸ் 2 விக்கெட்களை  வீழ்த்தினர். தொடர்ந்து 94 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரலிய அணி அதிரடியாக விளையாடி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அந்த அணியில் பெத் மூனே 43 ரன்கள் குவித்தார் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து