முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் வானில் வர்ணஜாலம் புரிந்த விமானங்கள் : லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      தமிழகம்
Marina 2024-10-06

Source: provided

சென்னை : இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று  விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற்று உள்ளது.

இந்திய விமானப்படை நிறுவன தினம் நாளை 8-ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு விமானப்படை நிலையங்களில், அணிவகுப்பு ஏற்பாடு தயாராகி வருகிறது. முதல் முறையாக தமிழகத்தில், பிரம்மாண்ட ஏர் ஷோ நேற்று காலை 11 மணிக்கு சென்னை, மெரினாவில் துவங்கியது.

முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து எம்.ஐ.,17 ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. சுகோய்-30 எம்.கே.ஐ., ரபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போன்ற போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. 

போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் எம்.ஐ-17 மற்றும் பிரசாந்த் எல்.சி.எச் (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. பிரெஞ்சு விமான நிறுவனத்தின் தயாரிப்பான சேத்தக் ஹெலிகாப்டர்கள் வானில் வலம் வந்தன. 

மூவர்ண தேசியக் கொடியை பறக்க விட்டப்படி சேத்தக் ஹெலிகாப்டர்கள் வானை அதிர வைத்தன. தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தன. இடிமுழக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.  

இந்திய விமானப் படையின் பழமையான டகோடா விமானங்கள் வானை வலம் வந்து சாகசம் புரிந்தன. வானில் இருந்து போர் புரியும் திறன் உள்ள மிக் 29 ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து மிரளச்செய்தன. 2 ஆயிரம் கி.மீ தூரம் செல்லக்கூடிய சி295 விமானம் மெரினா வான் பரப்பில் சாகசத்தில் ஈடுபட்டு சிலிர்க்க வைத்தது. 

கடலோரப் படையின் பி81 ரக விமானங்கள் மெரினா கடற்கரையில் சாகசம் புரிந்து மக்களை மெய்சிலிர்க்கச் செய்தன. சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானை வட்டமடித்து சாகசம் செய்தன. அனைத்து வானிலை தருணங்களிலும் போர் புரியக்கூடிய சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானம் பாய்ந்து சாகசம் புரிந்தன. 

சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானை வட்டமடித்து சாகசம் செய்தன. தேஜஸ் விமானங்களும் சீறிப்பாய்ந்து மெரினா கடற்கரையை அதிர வைத்து ஆச்சரியப்படுத்தின. மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் விண்ணில் வலம் வந்து சாகசம் செய்தன. 

சாரங் குழுவினரின் ஏ.எல்.எச்.எம். கே-1 ரக ஹெலிகாப்டர்களின் கண்கவர் வான் சாகசத்தை மக்கள் வியந்து பார்த்தனர்.  அதிர வைக்கும் ஓசையுடன் 5 ஹெலிகாப்டர்கள் புகையை கக்கியப்படி வானில் வலம் வந்தன. வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் வானில் ஹார்ட் வரைந்து பார்வையாளர்களை திகைக்கச்செய்தன.  

வானில் சுழன்று வந்தும் மேலும் கீழுமாக பறந்தும் கண்களுக்கு ஹெலிகாப்டர்கள் விருந்து படைத்தன. வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் வானில் ஹார்ட் வரைந்து பார்வையாளர்களை திகைக்கச் செய்தன. சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியது.  சூரியனை நோக்கியப்படி சீறிப்பாய்ந்து மெய்சிலிர்க்க வைத்தது.

சேத்தக் ஹெலிகாப்டர்கள் மெரினாவில் தாழ்வாகப் பறந்து மக்களை புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தியது. வானில் வர்ணஜாலம் புரிந்த விமானங்களால் மக்கள் பூரிப்படைந்தனர். சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  கடற்கரையில் கடல் அலையைக் கூட மிஞ்சும் வகையில் மக்கள் கூட்டம் இருந்தது. 

கடற்கரையில் குடை பிடித்தவாறு மக்கள் திரளாக கூடியிருந்து, வானில் நிகழ்ந்த சாகச நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.   விமான சாகசகத்தை நேரில் சுமார் 10 லட்சம் பேர் கண்டுகளித்தாக  தகவல் வெளியாகி உள்ளது.  இதன்மூலம் உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற்று உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து