முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பவுன் ரூ.56,480: தங்கம் விலை மீண்டும் உச்சம்

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை கடுமையான விலை உயர்வை சந்தித்தது இதனால், தங்கம் வாங்க வேண்டிய மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில், புதன்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.56,480க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 7 ஆயிரம் ரூபாயாக நேற்று முன்தினம் இருந்த நிலையில், நேற்று ரூ.7,060 ஆக உயர்ந்தது.

24 காரட் தங்கம் விலை, ஒரு சவரனுக்கு ரூ.528 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.61,616 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.61,088 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7702 ஆக அதிகரித்துள்ளது. தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்பனையானது.

செப்டம்பர் 16ஆம் தேதி முதல், விலை ஏறுவது, இறங்குவது என இருந்து வந்த தங்கம் விலை, 20-ம் தேதி முதல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், கிட்டத்தட்ட ஓராண்டுக்கு ஒருசில நூறுகள்தான், கிராம் விலையில் ஏற்றம் ஏற்படும். ஆனால், கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஒரு ஆண்டுக்கு ஆயிரம் என்ற அளவில் ஒரு கிராம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு 6,200 என்ற அளவில் இருந்த தங்கம் விலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து ஆயிரத்தில் இருந்துள்ளது. தற்போது, ஏழு ஆயிரத்தை தங்கம் விலை தொட்டிருப்பதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து