முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி ஜிப்மரை தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      இந்தியா
Pondy 2024-10-09

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் ஜிப்மரைத் தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார்  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது தெரியவந்தது. 

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து இ-மெயில் அனுப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஜிப்மர் இயக்குநருக்கு நேற்று இ-மெயில் மிரட்டல் ஒன்று வந்தது. அதில், புதுவை பிரெஞ்சு தூதரகம் மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இது குறித்து ஜிப்மர் இயக்குநர் புதுவை போலீஸ் தலைமையகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.  இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பிரெஞ்சு தூதரக அலுவலகம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

துணைத் தூதரகத்துக்குள் சென்ற போலீசார், அங்கிருந்த அனைவரையும் வெளியே அனுப்பினர். அதன் பின் அறை, அறையாக வெடிகுண்டு சோதனை நடைபெற்றது.  சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. ஆகவே வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது. காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து