முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      தமிழகம்
KKSSR 2023 04 01

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில்,  மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. வரும் 15,16 மற்றூம் 17 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர்  அறிவுறுத்தியுள்ளார்.    

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர். பால், குடிநீர், உள்ளிட்ட உணவுப் பொருட்களை மழைக்கு முன்பாகவே தயாராக வைக்க அறிவுறித்தியுள்ளோம்.  பொதுமக்களுக்கு உதவ தமிழ்நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

நீர்வளத்துறை மூலம் நீர் நிலைகளை கவனித்து வருகிறோம். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் பொதுமக்களும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து