எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தி.மு.க. அரசுக்கு எதிராக 3 நகரங்களில் வரும் 17-ம் தேதி முதல் பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 450-க்கும் கூடுதலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்த தி.மு.க. அரசு, ஓய்வுபெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களைக் கூட நிரப்ப மறுக்கிறது. குத்தகை முறை பணி நியமனங்களின் மூலம் இளைஞர்களை அடிமாட்டு ஊதியத்திற்கு பணியமர்த்துகிறது.
தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அஞ்சி, உள்ளூர் மக்களுக்கு வேலை உத்தரவாதத்தை மறுக்கிறது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தற்போது வரை அதை நிறைவேற்ற அரசு மறுக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மூன்றரை ஆண்டுகளாக செயல்படுத்த தி.மு.க. அரசு மறுக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு சென்று விட்டன. அதனால் மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அனைத்து நிலையிலும் ஆட்சிக்கு எதிரான அனல் தகிக்கிறது.
தி.மு.க. அரசின் அவலங்களையும், மக்கள்விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தி.மு.க. அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 3 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
வரும் 17-ம் தேதி வியாழக்கிழமை மாலை, சிதம்பரம், விருத்தாசலத்திலும், வரும் 20-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை - திண்டிவனத்திலும், வரும் 26-ம் தேதி சனிக்கிழமை மாலை சேலத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த பொதுக்கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நானும், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகிறோம்.
இந்தக் கூட்டங்களில் பா.ம.க. மற்றும் அதன் சார்பு, இணை அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 4 days ago |
-
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
01 Jan 2025சென்னை : தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கடந்த 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
-
45-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு உபரி நீர் திறப்பு
01 Jan 2025மேட்டூர் : 45-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து நேற்று முதல் பாசனத்திற்காக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
சென்னை எழும்பூர் -தூத்துக்குடி இடையே 145 ஆண்டுகளை நிறைவு செய்த முத்துநகர் எக்ஸ்பிரஸ்
01 Jan 2025சென்னை : சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் அதிவேக விரைவு ரயில் 145 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 பேருக்கு கவுரவ விருது வழங்கும் மன்னர் சார்லஸ்
01 Jan 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 பேருக்கு கவுரவ விருதை அந்த நாட்டு மன்னர் சார்லஸ் வழங்குகிறார்.
-
ஹமாஸ்-இன் நுக்பா படைப்பிரிவு தளபதி டிரோன் தாக்குதலில் பலி : இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்
01 Jan 2025டெல் அவிவ் : ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தி இருக்கிறது.
-
ஆண்டு தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
01 Jan 2025சென்னை : ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது.
-
சமத்துவ தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம்: த.வெ.க. தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2025சென்னை : புத்தாண்டில் சமத்துவ தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
-
சென்னை-போடி விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
01 Jan 2025சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் ஜன.
-
புத்தாண்டு கொண்டாட்டம்: பெங்களூருவில் போதைப்பொருள் பறிமுதல்
01 Jan 2025பெங்களூரு : புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பெங்களூருவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
01 Jan 2025திருவனந்தபுரம் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்தனர்.
-
பிரிக்ஸில் உறுப்பு நாடாகும் தாய்லாந்து
01 Jan 2025பாங்காக் : பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது.
-
பாகிஸ்தானில் மன்மோகன் சிங் பிறந்த கிராமத்தில் இரங்கல் கூட்டம்
01 Jan 2025இஸ்லாமாபாத் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, அவர் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
-
இலங்கையில் 181 நாட்களாக பள்ளி வேலை நாள் குறைப்பு
01 Jan 2025கொழும்பு : இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் அதிரடி குறைக்கப்பட்டுள்ளது.
-
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
01 Jan 2025சென்னை : சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
-
சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை சட்டம் அமல்
01 Jan 2025பெர்லின் : சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
-
பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்
01 Jan 2025திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
பாடல் பாடி புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்
01 Jan 2025புதுவை, 2024-ம் ஆண்டு விடைபெற்றது.
-
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம்
01 Jan 2025மும்பை : 2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு பிறந்தது. நிதி தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.
-
திருப்பதி கோவிலில் 5 கிலோ நகை அணிந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்
01 Jan 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்காக பக்தர் ஒருவர் 5 கிலோ தங்க நகை அணிந்து வந்தார்.
-
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை தொடர ஒப்புதல்
01 Jan 2025புதுடெல்லி : பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
-
அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர்: தரவரிசையில் பும்ரா சாதனை
01 Jan 2025புது டெல்லி : ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா அதிக புள்ளிகள் (907) பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
-
புத்தாண்டில் பைக் ரேஸ்: சென்னையில் 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
01 Jan 2025சென்னை : புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக சென்னையில் 242 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
-
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
01 Jan 2025சென்னை : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
-
லாஸ் ஏஞ்சல்சில் காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் கைது
01 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் ஒரு கடையில் சுமார் 1,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான பொருட்களை திருடி சென்ற நபரை காவலர்களை தடுக
-
வைஷாலிக்கு வெண்கல பதக்கம்
01 Jan 2025நியூயார்க்கில் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.