முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ. 14-ம் தேதிக்கு பிறகு இலங்கை அதிபர் திசநாயகே இந்தியா வருகை

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      உலகம்
Disanayake-2024-10-15

கொழும்பு, நவம்பர் 14ம் தேதிக்கு பிறகு இலங்கை அதிபர் அனுரகுமரா திசநாயகே இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். 

இலங்கையில் கடந்த மாதம் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அனுரகுமரா திசநாயகே வெற்றி பெற்றார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாடு பயணமாக இந்தியாவுக்கு வருகை தர திசநாயகே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அதிபர் அனுரகுமரா திசநாயகேவின் டெல்லி பயணம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் நடக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. அதில் நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னரே பயணம் குறித்த தேதிகளை நாங்கள் விவாதிப்போம் என்று ஹேரத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து