முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      தமிழகம்
Firecrackers 2024-11-01

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன.

சென்னையில் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது. மழை பாதிப்பு இல்லாததால் பட்டாசு, துணிமணிகள், இனிப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினாலும் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. காலையிலும், மாலையிலும் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அதனை பின்பற்றவில்லை.

நேற்று முன்தினம் இரவு 7 மணியில் இருந்து பட்டாசு சத்தம் அதிரச் செய்தது. ஒவ்வொரு வரும் குடும்பம் குடும்பமாக வீதிகளுக்கு வந்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் புத்தாடை அணிந்து விதவிதமான பட்டாசுகளை கொளுத்தி பரவசம் அடைந்தனர். வானில் வெடித்து சிதறி வண்ணமயமாக பூக்களாக சிதறும் பட்டாசுகள் இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் பயன்படுத்தினார்கள். பகலை விட இரவில் தான் பட்டாசு அதிகளவில் வெடிக்கப்பட்டன. சென்னை மாநகரம் முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசு கழிவுகள் வீதிகளில் மலைபோல் தேங்கின. ஒவ்வொரு வீடுகளின் முன்பு வெடித்த பட்டாசுகளை பெருக்கி குவித்து வைத்திருந்தனர்.

சென்னையில் 34 ஆயிரம் தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களில் மக்கள் வெடித்த பட்டாசு குப்பைகளை அகற்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலையிலேயே ஈடுபட்டனர். 5 ஆயிரம் பேர் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வண்டியில் ஏற்றினர். தாங்கள் வழக்கமாக கொண்டு வரும் பேட்டரி வாகனம் உடனே நிரம்பி விட்டதால் அருகில் உள்ள மையங்களில் கொட்டி விட்டு மீண்டும் வந்து அள்ளினார்கள்.

ஒவ்வொரு தெருக்களில் பட்டாசு குப்பைகள் மலை போல் தேங்கியதை ஊழியர்கள் அள்ள முடியாமல் திணறினார்கள். சென்னையில் வழக்கமாக 5500 மெட்ரிக் டன் குப்பைகள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும். பட்டாசு வெடித்ததின் மூலம் கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கியது. மொத்தம் 15 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக குப்பைகள் குவிந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மண்டபத்திலும் எவ்வளவு குப்பைகள் சேகரிக்கப்பட்டன என்ற விவரம் முழுமையாக கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. குப்பைகள் அள்ளும் பணி பகல் 2 மணி வரை நடைபெற்றதால் முழு விவரம் தெரியவில்லை. பட்டாசு குப்பைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கொடுங்கையூர், பெருங்குடி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து