முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பஸ்தன் டிரைலர் வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      சினிமா
Kudumbasthan 2025-01-20

Source: provided

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டார்கள். விழாவில் பேசிய நடிகர் மணிகண்டன், இரண்டரை வருஷத்திற்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படம் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தில் நான் நடித்தாக வேண்டும் என காத்திருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இயக்குநர் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார்.

பிறகு இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும். என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர். அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக தான். அதை சரியான விதத்திலும் அவர் புரிந்து கொண்டார்.

சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து