முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 கலெக்டர்கள் பணியிட இடமாற்றம்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 36 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

தமிழக தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசன்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டராக பிரதாப், திருவாரூர் கலெக்டராக சிவசௌந்தரவள்ளி, சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தருமபுரி மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், தருமபுரி மாவட்ட கலெக்டராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக தினேஷ் குமார், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக தர்ப்பகராஜ், திருப்பத்தூர் கலெக்டராக மோகனசந்திரன், நெல்லை மாவட்ட கலெக்டராக சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் கலெக்டராக இருந்த பழனி, அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக லலித் ஆதித்யா நீலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்ட கலெக்டராக சதீஷ், தொழிலாளர் நல ஆணையராக ராமன் நியமனம், தமிழக அரசின் பொதுத் துறை இணை ஆணையராக சரயு, தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் இணைய தலைமை செயல் அலுவலர் ஸ்ருதன்ஜய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் துணை கலெக்டராக கிஷண் குமார், எம்டிசி மேலாண் இயக்குநராக பிரபு சங்கர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் மற்றும் செயலாளராக தட்சிணாமூர்த்தி, வணிகவரி இணை ஆணையராக பூங்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை செயலராக பிரதீப் யாதவ், துணை முதல்வர் உதயநிதியின் செயலர் பிரதீப் யாதவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத் திட்ட இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை - குமரி தொழில் வழித்தட திட்டத்தின் மேலாண் இயக்குநராக கூடுதல் பொறுப்பும் வகிக்கிறார். தமிழக அரசின் வழிகாட்டி பிரிவு நிர்வாக இயக்குநராக தாரேல் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் வழிகாட்டி பிரிவு நிர்வாக இயக்குநராக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட கலெக்டராக சதீஷ், பேரிடர் மேலாண்மை ஆணையராக தாமஸ் வைத்தியன், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையராக ஜெயா, கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளராக அம்ரித், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்புச் செயலராக கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து