தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      விளையாட்டு
Tendulkar 2025-01-17

Source: provided

மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

31-வது நபர்

பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த விருதானது 30 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கௌரவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டது. இதுவரையில் 30 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விருதினைப் பெறும் 31-வது நபராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளார்.

அதிக போட்டிகளில்...

51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அதேபோல, 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையும் தன்வசம் வைத்துள்ளார்.

பல்வேறு சாதனை...

டெஸ்ட் போட்டிகளில் அவர் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். இருப்பினும், அவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு தனது 16 வயதில் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் அங்கம் வகித்துள்ளார்.

சி.கே.நாயுடு விருது.... 

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது தொடர்பாக பி.சி.சி.ஐ. தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2024-ம் ஆண்டுக்கான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து