முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்க விழா கிடையாது : பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      விளையாட்டு
Pak 2024 11 13

Source: provided

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளன. 

பாகிஸ்தானில்...

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

பிரமாண்டமாக...

இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது. மேலும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பாக 8 அணிகளின் கேப்டன்கள் வைத்து போட்டோவும் எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

தொடக்க விழா...

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளன. பாகிஸ்தானுக்கு வெவ்வேறு தேதிகளில் அணிகளின் வருகை காரணமாக தொடக்க விழா மற்றும் கேப்டனின் அதிகாரபூர்வ கூட்டம் நடத்த சாத்தியமில்லை. இதனால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து