முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நா.த.க. வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      தமிழகம்
Seeman 2024-03-22

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி 'கரும்பு விவசாயி' சின்னம் கோரப்பட்ட நிலையில், அவருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி சென்னையில் காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 7-ம் தேதி அறிவித்தது. அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 47 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தரப்பில் 'கரும்பு விவசாயி' சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறி, மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து