முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து கடும் விமர்சனம்: கவாஸ்கர் மீது பி.சி.சி.ஐ.யிடம் புகார் அளித்த ரோகித் சர்மா

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மும்பை : இந்திய முன்னாள் வீரர் ஒருவர் மீது பி.சி.சி.ஐ.-யிடம் ரோகித் சர்மா புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோல்விக்கு... 

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பிய ரோகித் சர்மா தோல்விக்கு முக்கிய காரனமானார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

உள்ளூர் போட்டிகளில்..

குறிப்பாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்தும் அவர் பல விமர்சனங்களை முன்வைத்தார். இதனிடையே உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது.

ரஞ்சி கோப்பையில்...

இதனையடுத்து ரோகித் சர்மா ரஞ்சி கோப்பையில் மும்பை அணி தரப்பில் களமிறங்கினார். ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிரான மும்பையின் ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா 2 இன்னிங்ஸ்களில் முறையே 3,28 ரன்கள் அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

கவாஸ்கர் விமர்சனம்... 

இதனால் ரோகித் சர்மா ரஞ்சி கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கவாஸ்கர் மீண்டும் விமர்சித்தார். இப்படி அடுக்கடுக்கான விமர்சனங்களால் கோபமடைந்த ரோகித் சர்மா, சுனில் கவாஸ்கர் மீது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) புகார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தனக்கு அழுத்தத்தை...

தன்னை தேவையில்லாமல் விமர்சிப்பதாகவும், குறிப்பாக ரஞ்சி கோப்பையில் தனது ஈடுபாட்டை குறைசொல்வது நியாயமற்றது என்றும் இத்தகைய விமர்சனங்கள் தனக்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும் ரோகித் சர்மா, பி.சி.சி.ஐ. -யிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து