முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி இந்தியா வெற்றி: மகிழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் ஆட்டம்

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      விளையாட்டு
Gavaskar 2023-10-22

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியை கவாஸ்கர் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது.

இந்தியா வெற்றி...

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம்நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.

ரசிகர்கள் கொண்டாட்டம்...

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை 3-வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். மைதானத்தில் இந்திய அணியின் கொண்டாட்டத்தை பார்க்கவும் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்திய அணியின் வெற்றியையும், கொண்டாட்டத்தையும் ஜியோ ஹாட்ஸ்டார் தரப்பில் தொகுப்பாளர் மயான்தி லாங்கர், கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா உள்ளிட்டோர் வர்ணனை செய்து வந்தனர்.

கவாஸ்கர் ஆட்டம்...

இந்திய அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஒரு கட்டத்தில், சுனில் கவாஸ்கர் தன்னை மீறி களத்திலேயே குழந்தையை போல் டான்ஸ் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து