முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லலித் மோடிக்கு புதிய சிக்கல்

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      விளையாட்டு
Lalit-Modi-2025-03-10

Source: provided

ஐ.பி.எல். போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். பின்னர் வனுவாட்டு பாஸ்போர்ட் பெற்று அங்கு குடிபுகுந்தார்.

இந்நிலையில் லலித் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக வெறும் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை வனுவாட்டு இன்டர்போலை தொடர்பு கொண்ட இந்திய தரப்பு அதிகாரிகள், அவருக்கு எதிராக அலர்ட் நோட்டீஸை கொடுக்கச் சொல்லி உள்ளனர். உரிய நீதிமன்ற ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில்தான் வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அந்த நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அவர் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்த போது குற்ற பின்னணிகள் எதுவும் இல்லை என்பது இன்டர்போல் உறுதி செய்திருந்தது.

____________________________________________________________________________

கவாஸ்கருக்கு இன்சமாம் பதிலடி

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் பாகிஸ்தான் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  இது குறித்து கவாஸ்கர் கூறும்போது, “இப்போதைய பாகிஸ்தான் அணியினால் இந்திய-பி அணியைக் கூட வெல்ல முடியாது” என்று காட்டமாகக் கூறியதுதான் சர்ச்சையாகியுள்ளது,  

இதற்கு இன்சமாம் உல் ஹக் தன் பதிலில், “கொஞ்சம் புள்ளி விவரங்களைப் பாருங்கள் கவாஸ்கர். அவர் மூத்தவர், சீனியர் வீரர். அதனால் அவரை மிகவும் மதிக்கின்றேன். உங்கள் அணி நன்றாக ஆடியதா அதைப் புகழுங்கள், பாராட்டுங்கள் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இன்னொரு அணியைப் பற்றி இழிவாகப் பேச உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள் கவாஸ்கர். நான் இதனைக் கடுமையான தொனியில்தான் சொல்கிறேன். கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

____________________________________________________________________________

ஐ.பி.எல். ஹாரி ப்ரூக் விலகல்

ஐ.பி.எல்.  2025-ஆம் ஆண்டு சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐ.பி.எல்.  தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "வரும் ஐ.பி.எல்.  தொடரில் இருந்து விலகுவது என்ற மிகக் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம். ஆகவே வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராக விரும்புகிறேன். இதற்கு எனக்கு நேரம் தேவைபடுகிறது. என் நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு மிக முக்கியம்" என்று பதிவிட்டுள்ளார். ஐ.பி.எல்.  மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது.

____________________________________________________________________________

டென்னிஸ்: பெகுலா முன்னேற்றம்

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினா. இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (4-வது சுற்று) தகுதி பெற்றுள்ளார். இவர் 4-வது சுற்றில் ஸ்விடோலினா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து