முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: பார்லி. இரு அவைகளிலும் தி.மு.க. எம்.பி.க்கள் அமளி: கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      இந்தியா
Parlimanet 2024-06-30

புதுடெல்லி, தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோர வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.  எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக பாராளுமன்ற வளாகத்திலும் கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. குறிப்பாக அதில் இடம்பெற்று உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி அந்த கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் முன்தினம் தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது பகுதியில்,  மத்திய கல்வி மந்திரி தி.மு.க.  எம்.பி.க்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.   அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தி.மு.க. மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும் மத்திய மந்திரிக்கு எதிராக தி.மு.க.  எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். 

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க.  மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து பாராளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது. அவை தொடங்கியதில் இருந்தே மக்களவையில், தி.மு.க.  கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். 

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தி.மு.க.  கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கம் எழுப்பினர். மேலும் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். அதைபோல தொகுதி சீரமைப்பு, கல்வி நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த நோட்டீஸ் மீது விவாதம் நடத்த அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையிலும் தி.மு.க.  மற்றும் கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து