முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      விளையாட்டு
Pak 2024-08-21

Source: provided

துபாய்க்கு உலக லெவனை கூட்டி சென்றாலும் இந்திய அணி எளிதில் வீழ்த்தி விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர ஷாகீத் அப்ரிடி பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " அவர்கள் வெற்றி பெறத் தகுதியானவர்கள். நீங்கள் உங்கள் நாட்டில் கிரிக்கெட்டில் நல்ல முதலீடு செய்யும்போது, அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் தேர்வு அற்புதமானது. ஆம், அவர்கள் தங்கள் அனைத்து போட்டிகளையும் ஒரே இடத்தில் விளையாடியதாலும், இடங்களை மாற்றாததாலும், அவர்களுக்கு நிலைமைகள் தெரியும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அது அவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரிய காரணம்.

ஆனால் உண்மையான காரணம் அவர்களின் தேர்வு தான். நான் துபாயில் விளையாடியதால் இது எனக்குத் தெரியும், சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு இங்கே மிகவும் முக்கியமானது. அவர்களின் தேர்வு மிகவும் நன்றாக இருந்தது. தொடக்க வீரர்கள் முதல் மிடில் ஆர்டர் வரை, ஆல்ரவுண்டர்கள், உண்மையான சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் வரை இந்திய அணியைப் பார்த்தால் நீங்கள் உலக லெவனை உருவாக்கி, துபாயில் இந்தியாவுக்கு எதிராக விளையாட வைத்தால், இந்தியா தான் வெற்றி பெறும் என்று நான் கூறுவேன்" என கூறினார். 

___________________________________________________________________________________________

டி-வில்லியர்ஸ் அதிரடி சதம் 

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். அதன் பின் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் டி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் 'லெஜண்ட்ஸ் லீக்' டி20 தொடரில் களமிறங்க முடிவு செய்தார். அதன்படி டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றார். 

அந்த வகையில்  3 நாட்களுக்கு முன் நடைபெற்ற புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டைட்டன்ஸ் அணி தரப்பில் களமிறங்கிய டி வில்லியர்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரளவைத்தார். வெறும் சிக்சர்கள் மட்டுமே அடிப்பதில் கவனம் செலுத்திய அவர் 28 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதில் 15 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய புல்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் அடித்திருந்தபோது போட்டி மழையால் தடைப்பட்டது. டக்வொர்த் முறைப்படி டைட்டன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

___________________________________________________________________________________________

பெங்களூரு மைதான பராமரிப்பு

கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக  பெங்களூரு மைதான பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் பேசப்படும் டி20 தொடராக ஐ.பி.எல்.  பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் 18-வது சீசன் இந்த மாதம் 22-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் நிறைய வீரர்கள் மற்ற அணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஹோம் மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் இந்த ஐ.பி.எல்.  தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர்தான் பயன்படுத்தப்படும் என பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து