முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவீந்திர ஜடேஜா 'கம்பேக்கை' புஷ்பா பட பாணியில் அறிவித்த சி.எஸ்.கே. நிர்வாகம்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      விளையாட்டு
CSK 2024-03-11

Source: provided

சென்னை : ஜடேஜா அணியில் இணைந்ததை 'புஷ்பா' பட ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு சி.எஸ்.கே.நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டி...

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

சேப்பாக்கத்தில்...

இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் வரும் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது. இந்த தொடருக்காக தற்போது ஐ.பி.எல்.அணிகள் அனைத்தும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

புஷ்பா பட பாணியில்... 

இந்நிலையில் சமீபத்தில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய வீரர்கள் தனித்தனியாக தாயகம் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி வீரரான ஜடேஜா தாயகம் திரும்பியதும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியுடன் இணைந்துள்ளார். இதனை சி.எஸ்.கே. நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் அண்மையில் வெளியான 'புஷ்பா' திரைப்பட பாணியில் மாஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து