முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா ஆணவப்படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      இந்தியா
Telangana-Map

நல்கொண்டா, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடாவைச் சேர்ந்த பிரணாய் குமார், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டாவது குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்ருதா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பிரணாய், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் தந்தை மாருதிராவ், ஆணவப்படுகொலை செய்ய முடிவெடுத்தார். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணமாகி, அம்ருதா தாய்மையடைந்திருந்த நிலையில், செப்டம்பர் மாதம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த போது, கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் பிரணாயை வெட்டிக்கொன்றனர். அப்போது இந்த படுகொலைக் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பலரும் தங்கள் பிள்ளையைப் போல பார்த்துப் பதறினர்.

இந்த வழக்கில், முதல் குற்றவாளி தொழிலதிபர் மாருதி ராவ் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இரண்டாவது முக்கிய குற்றவாளி சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302ஆவது பிரிவின்படி, சுபாஷ் சர்மாவை சாகும்வரை தூக்கிலிட நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அம்ருதாவின் மாமா உள்பட ஆறு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூலிப்படைத் தலைவன் அக்சர் அலி உள்ளிட்டவர்களுக்கு, மாருதி ராவ், தனது மகள் அம்ருதா காதல் திருமணம் செய்துகொண்டது பிடிக்காமல், பணம் கொடுத்து பிரணாயைக் கொலை செய்தது காவல்துறை விசாரணையில் முழுமையாக நிரூபிக்கப்பட்டது.

தீர்ப்பைத் தொடர்ந்து, பிரணாயின் குடும்பத்தினர், அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், ஜாதி மதத்தைப் பெரிதாக நினைத்து பிள்ளைகளின் வாழ்வை நாசமாக்க வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து